KAMALA KANNAN NARAYANAN
5 months 2 weeks ago
பாரத பிரதமர் அவர்களுக்கு மகோன்னத வணக்கங்கள்.
நாட்டில் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தனியார் நடத்தும் நிறுவனங்களில் வேலைபார்க்கும் போது தொழிலாளர் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் பணியாளர்களுக்கு கிடைப்பதில்லை. குறைந்தபட்சம் ஊதியப் பட்டியலை மத்திய மாநில அரசுகள் வெளிப்படையான அரசாணை மூலம் தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனங்கள் வழங்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைந்தபட்ச வாழ்க்கை நடத்துவதற்கான வாழ்வாதார நடவடிக்கைககள் ஊதியம் பெறும் பணியாளர்களளுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அரசுப் பணி ஊதியத்திற்க்கும் தனியார் பணி ஊதியத்திற்க்கும் சமத்துவம் அளவுகோல் இன்றுவரை அமல்படுத்தாததது பாமர பாட்டாளி மக்களின் மீது சுரண்டலை ஏற்படுத்துவதாக உள்ளது. பாரத பிரதமல் இதில் தனிக்கவனம் செலுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று பட்டாளி மக்கள் சார்பில் வேண்டுகிறேன்.
ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்
கமலக்கண்ணன் நாராயணன்.
Like
(3)
Dislike
(0)
Reply
Report Spam